தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்படலாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நீர்வரத்தை பொறுத்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு சுமார் ஐந்து ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப்படலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்