அடிபட்டு கடைசி நொடியை எண்ணிய நாய்..கடவுள் போல் வந்து காப்பற்றிய நபர்...நெகிழ வைத்த சம்பவம்
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருவங்காடு போன்ற பகுதிகளில் காயப்பட்டு பரிதவிக்கும் செல்லப் பிராணிகளை மீட்க தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அருவங்காடு பாய்ஸ் கம்பெனிபகுதியில் நீரோடை பகுதியில் நாய் ஒன்று விழுந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தன்னார்வலர் ஒருவர் நீரோடையில் இருந்த நாயை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நீண்ட நேர போராட்டத்துக்கு பின் நாயை கயிறு கட்டி மீட்டதோடு அதனை கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அந்த நபரை பாராட்டியதோடு மிகவும் நெகிழ்ச்சி அடைந்தனர்.