விளையாடி முடிந்ததும் பிரிந்த உயிர்.. சென்னையில் 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
சென்னை போரூர் அருகே, 13 வயது பள்ளி மாணவர் ஒருவர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போரூர், நியூ காலனியை சேர்ந்தவர் சாய் சஞ்சய். தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள காலி இடத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. விளையாடி முடித்து விட்டு, அங்கிருந்த குட்டையில் கை, கழுவ சென்ற மாணவர், குட்டைக்குள் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்திருக்கும் போலீசார், சிறுவனின் மரணம் விபத்தா, கொலையா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.