இடி மின்னலால் தூத்துக்குடியில் பலியான உயிர் - 2 கோடி அலைபேசிகளுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள்

Update: 2024-05-19 12:20 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் இடி, மின்னல் தாக்கியதன் காரணமாக ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழையால் 15 கால்நடைகள் இறந்துள்ளன... பல வீடுகள் சேதமடைந்துள்ளன. நிலையான வழிகாட்டு நடைமுறையினை பின்பற்றி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை அடுத்துள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் பலத்த காற்று, கடல் அலை, சீற்றம் குறித்து எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனியில் 2 கோடி அலைபேசிகளுக்கு பொதுவான எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 296 வீரர்கள் அடங்கிய 9 குழுக்கள் குமரி, நெல்லை, நீலகிரியில் நிலைநிறுத்தப் பட்டுள்ளனர். நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை இருப்பதால் சுற்றுலா வர எண்ணினால் பாதுகாப்புடன் வருமாறும், தவிர்க்க எண்ணினால் தவிர்க்கலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் கூடுதல் அலுவலர்களுடன் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்