தூத்துக்குடியில் வெடித்த திடீர் போராட்டம் - பரபரப்பு காட்சிகள் | thoothukudi
வெளியேற்றப்பட்ட ஊழியர்களுக்கு முறையாக பணப்பலன் வழங்கப்படாததை கண்டித்து, தூத்துக்குடி மதுரா கோட்ஸ் ஆலை முன் அமர்ந்து, தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த மதுரா கோட்ஸ் ஆலையை ஆலை நிர்வாகம் மூடியது. அத்துடன் அங்கு வேலை பார்த்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு, முறையாக நோட்டீஸ் வழங்காமல் வலுக்கட்டாயமாக வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் முறையாக வழங்கப்படவில்லை. இதை கண்டித்து, தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.