மதுரையில் பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கிய சம்பவம் - வெளியான பகீர் வீடியோ
மதுரை வைகை ஆற்றுப் பகுதியில் உள்ள கல் பாலத்தில் பள்ளி மாணவர் ஒருவரை 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தி இந்த சம்பவத்தின் பின்னணியில், செல்லூர் பகுதியில் இருந்த மாணவரை அழைத்து வந்து சரமரியாக தாக்கியது முதல் கட்ட விசாரணையை தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோ காட்சியை அடிப்படையாகக் கொண்டு செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியார் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற தொடரும் மாணவர்கள் மோதலால், பெற்றோர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.