முற்றிய முன்விரோதம்.. மாறி... மாறி சரமாரி வெட்டு - குலை நடுங்க வைத்த கொடூர சம்பவம்

Update: 2024-10-30 12:01 GMT

பேட்டை அருகே மலையாளமேடு பகுதியை சேர்ந்த பரமசிவம் மற்றும் தொழிலாளி மண்டையன் பெருமாள் குடும்பத்தினருக்கு இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பரமசிவம் சாப்பிட்டு முடித்துவிட்டு வீட்டின் வெளியே தனது மகன் மாரிசெல்வன் மற்றும் உறவினர் விக்கி என்பவருடன் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மண்டையன் பெருமாளின் மகன்கள் மருது, கார்த்திக், லெட்சுமணன், அவரது மருமகன் முருகபெருமாளுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மருது மற்றும் கார்த்திக் சேர்ந்து, பரமசிவத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற மாரிசெல்வனுக்கும், விக்கிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனிடையே, பதிலுக்கு மாரிசெல்வன் அரிவாளால் வெட்டியதில் முருகப்பெருமாள் மற்றும் அங்கு வந்த மண்டையன் பெருமாள் படுகாயமடைந்தனர். பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெட்டுக்காயம் அடைந்த மாரிச்செல்வன் உள்ளிட்ட 5 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்