தந்தை செய்த கொடூர செயல்..காப்பாற்ற கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் விட்ட மகள்.. | Salem
சேலத்தில், தன்னை பள்ளி செல்லக்கூடாது என மிரட்டும் தந்தையிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென அரசு பள்ளி மாணவி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோணகாபாடியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகளின் பள்ளி படிப்பை நிறுத்தியதோடு, இரண்டாவது மகளின் படிப்பையும் நிறுத்துமாறு மனைவி மற்றும் பிள்ளைகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அச்சமடைந்த மாணவி, ஆட்சியரகத்தில் கண்ணீர் மல்க தந்தையின் நடவடிக்கை குறித்து மனு அளித்தார்.