தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திருநெல்வேலி கோட்டம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் அஞ்சுகிராமம் பேரூராட்சி புதுக்குளம் திட்டப் பகுதியில் ஏழை மக்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. கடந்த ஞாயிற்று கிழமையன்று அங்கு சோதனைக்கு வந்தவர்கள், அரசு அலுவலத்தில் முறையாக பணம் கட்டவில்லை என்று கூறி, வீடுகளை காலி செய்ய வலியுறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதிகாரிகள் கூறியபோது, பணம் கட்டியும், அந்த பணம் தங்களிடம் வந்து சேரவில்லை என்று கூறுவதாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.