ஆபத்தை அருகில் வைத்துக்கொண்டு அசால்டாக நிற்கும் சிறுவர்கள்
கனமழையால் சென்னை ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் வலைகளை விரித்து மீன் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார் ஆபத்தான முறையில் குளித்து விளையாடிய இளைஞர்களை, எச்சரித்து அப்புறப்படுத்தினர்.