டிச. மழைக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக...வேலையை காட்டிய இயற்கை எதிர்பாரா மாற்றம்...
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணம் அருகே ஆற்று நீர் உப்பாக வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பரக்காணி பகுதி அருகே ஆற்று நீருடன் கடல் நீர் கலப்பதை தடுக்கும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால், ஆற்றுநீர் திசைமாறி பாயத்தொடங்கியது. இதன்காரணமாக அப்பகுதியில் விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீர் உப்பாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.