வாட்ஸ் அப்பில் வந்த கணவன் மனைவியின் அந்தரங்க வீடியோவாட்ஸ் அப்பில் வந்த கணவன் மனைவியின் அந்தரங்க வீடியோ
தமிழக - கேரள எல்லையான, நெட்டா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தங்களின் அந்தரங்க வீடியோக்களை மர்மநபர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பியதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, வெளிநாட்டு எண்ணில் இருந்து ஒரு வாட்ஸ்அப் கால் வந்துள்ளது. அதில், சம்பந்தப்பட்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க 10 லட்சம் ரூபாய் வேண்டும் எனக்கூறி மர்மநபர்கள் மிரட்டியுள்ளனர். இது குறித்து தம்பதி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தம்பதியிடம் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்த சங்கீத் மற்றும் மிதுன் ஆயோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இருவரும் சில நாள்களுக்கு முன் வேலையை விட்டு நீக்கப்பட்டது தெரியவர, இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.