போஸ்ட்மார்ட்டம் முடித்து உடலை தகனம் செய்த உறவினர்கள்..திடீரென உயிருடன் வந்து நின்ற உடல்-அலறிய மக்கள்
போஸ்ட்மார்ட்டம் முடித்து உடலை தகனம் செய்த உறவினர்கள்
திடீரென உயிருடன் வந்து நின்ற உடல்
அலறி ஓடிய ஊர் மக்கள்
தரங்கம்பாடி அருகே ஆற்றில் மூழ்கி இறந்ததாக கருதப்பட்டு இறுதி சடங்கு செய்து தகனம் செய்யப்பட்டவர் உயிரோடு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மேலப்பாதி பகுதியில் கடந்த 22ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் காவிரி ஆற்றில் கிடந்தது. இறந்தவர், மருதூர் லட்சுமி நாராயணபுரத்தை சேர்ந்த செல்வராஜ் என கிராம மக்களால் தெரியவந்தது. இதையடுத்து, செல்வராஜின் மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இறுதி காரியங்கள் செய்து உடலை குடும்பத்தினர் தகனம் செய்துள்ளனர். இந்நிலையில், இறந்ததாக நினைத்துக் கொண்டிருந்த செல்வராஜ், திடீரென உயிருடன் வந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். அதன் பிறகு விசாரித்தபோது, அடையாளம் தெரியாத உடலை, காணாமல் போன செல்வராஜ் நீரில் மூழ்கி இறந்ததாக நினைத்து தகனம் செய்தது தெரிய வந்தது. தனது குடும்பத்தினரிடம் 30 படைத்து விட்டீர்களா? சரக்கு வைத்து படைத்திருப்பீர்கள்? எங்கே சரக்கு? என்று கேட்டதாக செல்வராஜ் தெரிவித்தார். இதனிடையே, சடலமாக கிடந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.