ஆசை காட்டிய பக்கத்து கடைக்காரர்..பணத்தை அள்ளி கொடுத்த எலக்ட்ரானிக் கடை ஓனர்-பர்மா பஜாரில் அதிர்ச்சி

x

சென்னை பர்மா பஜாரில் மின்சாதன கடை நடத்தி வருபவரை நூதன முறையில் ஏமாற்றி, 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த செந்தில், பர்மா பஜாரில் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அருகாமையில் கடை நடத்தி வரும் முகைதீன் அப்துல் காதர் என்பவர் செந்திலிடம் நட்பாக பழகி, வெளிநாட்டில் இருந்து குறைந்த விலைக்கு எலக்ட்ரிக் பொருட்களை வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்கலாம் என ஆசைக்காட்டியுள்ளார். இதற்காக செந்திலிடம் 38 லட்சம் ரூபாய் பணத்தை பெற்ற முகைதீன், பொருட்களை தராமால் பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். தொடர்ந்து இவர் செந்திலுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த செந்தில், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், முகைதீன் அப்துல் காதர், அவரது மனைவி உஸ்னாரா பேகம் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்