இது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி, நீதிபதிகள் நியமனம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை, நாளைக்கு பட்டியிலிடப்பட்டிருப்பதாகக் கூறி, இந்த விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமெனத் தெரிவித்தார். மேலும், அடுத்த விசாரணையின் போது, உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகள் குறித்த தகவல்களை வழங்குவதாகவும் ஒப்புதல் தெரிவித்தார். இதற்கு தலைமை நீதிபதி, வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே பட்டியலிடப்பட்டு விட்டதால், தள்ளி வைக்கும் கோரிக்கையை நாளை முன் வைக்கலாம் எனக் குறிப்பிட்டார். மேலும், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் தொடர்பாக அம்மாநில அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.