சென்னையில் பாடி பில்டிங் இளைஞர்களுக்கு மெத் ஊசி... வெளியான அதிர்ச்சி தகவல்
ராஜமங்களம் பகுதியில் பாடிபில்டிங் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு மெத் என்ற தடைப்பட்ட ஊசி விற்பனை செய்யப்படுவதாக ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த தகவலில், வில்லிவாக்கம் ஜெகநாதன் நகரை சேர்ந்த தீனா என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் விற்பனை வழக்கில் ஏற்கனவே கைதான மூலக்கடை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் , அவருடைய கூட்டாளி பிரபு ஆகியோர். போதைப்பொருள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இந்தியா மார்ட் என்ற இணையத்தளத்தின் மூலமாக ஆர்டர் செய்து அவர்கள் விற்பனை செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.