இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை?.. ராகுல் பரபரப்பு பேட்டி

Update: 2024-09-09 04:32 GMT

இந்தியாவில் வேலை வாய்ப்பு பிரச்சனைகள் உள்ளதாக நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள ராகுல்காந்தி டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உலகில் சீனா , வியட்நாம் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் வேலை வாய்ப்பு பிரச்சனைகள் இல்லை என்று கூறினார். ஆனால் இந்தியாவில் வேலை வாய்ப்பு பிரச்சனைகள் உள்ளதாக அவர் கூறினார்.

1960 ஆம் ஆண்டு வரை உலக உற்பத்தி மையமாக அமெரிக்கா திகழ்ந்ததாக ராகுல்காந்தி தெரிவித்தார். கார், வாஷிங்மிஷின், டிவி உள்ளிட்ட எந்த பொருளும் அமெரிக்க தயாரிப்பாக அப்போது இருந்தது என்று அவர் கூறினார். ஆனால் இப்பொருட்களை தயாரிப்பதில் இப்போது சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருட்களின் உற்பத்தி யுத்தியை சீனாவிடம் தாரை வார்த்து விட்டதாக அவர் குற்றம்சாட்டினார். உற்பத்தி பாதையை மறந்து சென்றால் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் மிகப்பெரிய சமூக பிரச்சனைகள் வெடிக்கும் என்று அவர் தெரிவித்தார். தாம் மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்திரையின் போது மக்களின் பிரச்சனைகளை தெளிவாக அறிந்து கொண்டதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்