அரசு பள்ளியில் அட்மிஷனுக்காக அலைமோதும் பெற்றோர்.. கூட்டத்தை பார்த்து ஷாக்கில் பிரைவேட் ஸ்கூல்ஸ்
சென்னை அரசு பள்ளியில் அட்மிஷனுக்காக அலைமோதும் பெற்றோர்.. கூட்டத்தை பார்த்து ஷாக்கில் பிரைவேட் ஸ்கூல்ஸ்
சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பில் மாணவிகளை சேர்ப்பதற்காக, பெற்றோர் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தனர். ஆறாம் வகுப்பில் 500 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், முதல் நாளிலேயே பெரும்பாலான இடங்கள் நிரம்பும் அளவிற்கு பெற்றோர்கள் குவிந்திருந்தனர். இங்கு பணி புரியும் தலைமை ஆசிரியர் முதல் ஒட்டுமொத்த ஆசிரியர் குழுவினரும் முழு ஈடுபாட்டுடன் கடுமையாக உழைப்பதன் காரணமாக, தொடர்ச்சியாக 100 விழுக்காடு தேர்ச்சி, மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் பள்ளி என்ற நற்பெயரை இந்த பள்ளி தக்க வைத்துக் கொண்டு வருவதால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இங்கு சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்