கோயிலை திடீரென இடித்த அதிகாரிகள் - ஆத்திரத்தில் மக்கள் செய்த செயல் - நெல்லையில் பரபரப்பு

Update: 2023-09-15 11:35 GMT

நெல்லை மாவட்டம் கண்டியபேரி பகுதியில் சுடலை மாடசாமி கோவில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதிகாரிகள் கோவிலை இடித்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் கண்டியபேரி பகுதியில் சீவலப்பேரி சுடலை ஊய்க்காட்டு சுடலை கொம்பு மாடசாமி கோவில் உள்ளது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் கட்டப்பட்டிருந்த கோவிலை ஆக்கிரமிப்பில் இருப்பதாக திடீரென இடித்து அகற்றி உள்ளனர். இதையறிந்த பகுதி மக்கள் ஹிட்டாச்சி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் ஆத்திரமடைந்து அதிகாரியின் வாகனத்தை தாக்கினர். இந்த நிலையில் போலீசார் பொதுப்பணித்துறை அதிகாரி நந்தினியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்