மகளிர் உரிமைத் தொகை - "மனசாட்சி உள்ள யாரும் இத்திட்டத்தைக் குறை கூற மாட்டார்கள்"

Update: 2023-09-16 15:26 GMT

கலைஞரின் மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தைப் பாராட்டி கொளத்தூர் தனியார் பள்ளி மாணவிகள் ஆயிரம் பூங்கொத்துக்கள் மற்றும் ஆயிரம் கிலோ மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்... ஆயிரம் என்ற எண்ணின் வடிவத்தில் அமர்ந்து மாணவிகள் நன்றி தெரிவித்த நிலையில், இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வரின் திட்டமிடலுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இதுவென்று புகழாரம் சூட்டியதுடன், மனசாட்சி உள்ள யாரும் இத்திட்டத்தைக் குறை கூற மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்