போட்டோ எடுத்தவர்களை மிரட்டிய கரடி.. பீதியில் உறைந்த மக்கள்.. வைரலாகும் வீடியோ

Update: 2024-08-20 15:47 GMT

 நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புகைப்படம் எடுக்க முயன்றவர்களை ஆக்ரோஷத்துடன் எழுந்து நின்று மிரட்டிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரி அக்கல் கிராமத்தில் சாலையில் ஒரத்தில் கரடி ஒன்று உலா வந்து கொண்டிருந்தது. அதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வீடியோ எடுத்தனர். அப்போது அந்த கரடி ஆக்ரோஷத்துடன் எழுந்து நின்று அவர்களை மிரட்டியதால் அச்சமடைந்த பயணிகள் கார் கண்ணாடியை அடைத்துக்கொண்டு புறப்பட்டனர். . தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்