2024ம் ஆண்டு, மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மார்ச் 9 ஆம் தேதி கடைசி நாள் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், இணையதளத்தில் சர்வர் பிரச்சினை மற்றும் ஓடிபி வருவதில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தினால், மாணவ, மாணவிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் 2024 ம் ஆண்டிற்கான மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க மார்ச் 16ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.