#BREAKING || கட்டை, கம்புகளை வைத்து சரமாரியாக தாக்கிக் கொண்ட மாணவர்கள்.. திருச்சி அருகே பரபரப்பு
திருச்சி மாவட்டம், முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களிடையே பயங்கர மோதல். கட்டை மற்றும் கம்புகளால் மாணவர்கள் தாக்கி கொண்டதால் பரபரப்பு. முதலாம் ஆண்டு படித்து வரும் ஒரு மாணவனுக்கும், 3வது ஆண்டு படித்து வரும் ஒரு மாணவனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்தகராறால் விபரீதம். ஒரு தரப்பு மாணவனின் சகோதரன், உறவினர்கள், நண்பர்கள் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து கம்பு, கட்டைகளால் எதிர் தரப்பு மாணவனை அடித்து உதைத்ததால் பரபரப்பு. மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலுக்கு ராகிங் காரணமா, வேறு ஏதேனும் பிரச்சினையா என போலீசார் விசாரணை.