திருச்செந்தூரில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள அறைகள், படுக்கை வசதிகள், கழிவறைகளை ஆய்வு செய்த அவர், ஓட்டலில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, சுற்றுலாப் பயணிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். குலசேகர பட்டினம் மற்றும் மணப்பாட்டில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தேவையான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும் என்ற அமைச்சர், திருச்செந்தூரில் தமிழ்நாடு ஓட்டலில் உள்ள வசதிகள் தனியார் ஓட்டல்களில் கூட இல்லை என்றார்.