அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியதை எதிர்த்த அமலாக்கத்துறையின் மனு மீதான விசாரணையை, செப்டம்பர் 5-ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த நீதிபதி, ஜாமினை ரத்து செய்தால் மீண்டும் கெஜ்ரிவாலை கைது செய்ய திட்டம் உள்ளதா என அமலாக்கத்துறை வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அமலாக்கத்துறை தரப்பில் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டதை ஏற்று, செப்டம்பர் 5-ம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.