இது நிஜ அத்திப்பட்டி.. மாயமான கிராமம்.. 70 குடும்பங்கள் எங்கே? என்ன ஆனார்கள்? அதிர வைக்கும் கதை

Update: 2024-09-05 09:22 GMT

அத்திப்பட்டி கிராமத்தை போல கல்வராயன் மலையில் இருந்த ஒரு கிராமமே வெளி உலகிற்கு தெரியாமல் மாயமான சம்பவத்தின் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

சமீபத்தில் தமிழகத்தையே உலுக்கிய விஷச்சாராய மரண விவகாரத்தில் போலீசாரால் அதிகம் பேசப்பட்டது கல்வராயன் மலையில் உள்ள மனப்பாச்சி கிராமம்...

ஆம், மனப்பாச்சி கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான சாராய ஊறல்களை அழித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது..

இதன் மூலம் வெளியுலகத்திற்கு தெரிய வந்த மனப்பாச்சி கிராமமோ, மனிதர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியே கிடக்கிறது.

கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் ஆரம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட மனப்பாச்சி கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன.

ஆனால் தற்போது ஆள் நடமாட்டமேயின்றி வீடுகள் இடிந்து போன நிலையில் அழிந்து போன கிராமமாக மாறியுள்ளது மனப்பாச்சி.. காரணம் அடிப்படை வசதிகள் இல்லாததே என்கின்றனர் கிராமவாசிகள்...

சொந்த மண்ணில் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறோம் என ஏக்கத்துடன் கோரிக்கை வைத்துள்ள மனப்பாச்சி கிராம மக்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்..

தந்தி டிவி செய்திகளுக்காக செய்தியாளர் பழனிவேல்...

Tags:    

மேலும் செய்திகள்