ஈஷா விவகாரம்.. மகளை மீட்க தந்தையின் போராட்டம்.. ஐ கோர்ட் உத்தரவுக்கு தடை

Update: 2024-10-03 13:51 GMT

ஈஷா விவகாரம்.. மகளை மீட்க தந்தையின் போராட்டம்.. ஐ கோர்ட் உத்தரவுக்கு தடை

#isha #coimbatore #highcourt #supremecourt

ஈஷா யோகா மையம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

கோவை ஈஷா யோகா மையத்திலிருக்கும் தனது 2 மகள்களை மீட்டு தரக்கோரி வடவள்ளியை சேர்ந்த காமராஜ், உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கை தொடர்ந்தார். யோகா படிக்க சென்ற மகள்களை சன்னியாசியாக்கிவிட்டார்கள், மகள்களை மீட்டு தரவேண்டும் என கேட்டிருந்தார். இந்த வழக்கில் ஈஷா யோகா மையத்துக்கு எதிராக எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற விவரங்களை அக்டோபர் 4 ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் காவல்துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தடை செய்யக்கோரி ஈஷா யோகா மையம் உச்சநீதிமன்றம் சென்றது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் மனுவை அவசரமாக விசாரிக்க கேட்கப்பட்டது. முறையீட்டை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், ஈஷா யோகா மையம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றியது. தமிழக காவல்துறை நிலவர அறிக்கையை அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்