விஸ்வரூபமெடுத்த `இட்லி' விவகாரம்... களமிறங்கிய டீம் - பறந்த உத்தரவு - பரபரப்பில் கடை ஓனர்கள்

Update: 2024-09-27 15:40 GMT

பிளாஸ்டிக் தாளில் இட்லி வேக வைக்கும் உணவகங்களுக்கு சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

நம்மூரில் பெரும்பாலானோரின் காலை, இரவு உணவு இட்லிதான்...

சுவையாகவும் இருக்க வேண்டும் உடலுக்குத் தீங்கும் விளைவிக்கக் கூடாது என்றால் இட்லி தான் Best Choice...

ஆனால் பிளாஸ்டிக் தாளில் வேகவைக்கும் இட்லிகளுக்கு உயிர் இருக்குமா?...

சென்னையில் பெரும்பாலான மக்கள் சாப்பாட்டுக்கு நம்பி இருப்பது உணவகங்களைத் தான்...

பெரிய உணவகமோ...தள்ளுவண்டிக் கடையோ...எப்போதும் கூட்டம் அலைமோதும்...

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கையேந்தி பவனே கதி என நாளைக் கழிக்கின்றனர்...

சுடச்சுட இட்லி...2 வகை சட்னி...சாம்பார் எல்லாம் கிடைப்பதால் சுகாதாரத்தையோ ஆரோக்கியத்தையோ யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை...

பெரும்பாலான சிறிய சிறிய கடைகளில் பிளாஸ்டிக் தாளில் தான் இட்லி வேக வைக்கப்படும் நிலையில்...

இட்லிக்குத் தொட்டுக் கொள்ள சாம்பார், சட்னி கட்டித் தரவும் பிளாஸ்டிக் கவர்களே பயன்படுத்தப்படுகின்றன...

அதேபோல் இட்லியை சாப்பிட வைத்துக் கொடுக்கும் தட்டின் மீதும் பிளாஸ்டிக் பேப்பர் தான் போடப்படுகிறது...

இது உடலுக்கு எவ்வளவு மோசமான தீங்குகளை விளைவிக்கும் எனத் தெரிந்தே கடைக்காரர்கள் இவ்வாறு செய்வதை என்னவென்று சொல்வது?...

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறைக்கும்... பெருநகர சென்னை மாநகராட்சிக்கும் ஏகப்பட்ட புகார்கள் குவிந்துள்ளன...

இந்நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சாலையோர சிற்றுண்டி கடைகள், தன்ளுவண்டி கடைகள் மீது கவனத்தை

திருப்பியுள்ளனர்...

இதற்காக அதிகாரிகள் குழுக்களும் நியமிக்கப்பட்டு...நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நேரடி ஆய்வில் ஈடுபட உள்ளனர்...

தவறுகள் கண்டறியப்படும் பட்சத்தில் அதிக அபராதம், அத்துடன் கடைகளுக்கே சீல் வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்...

உரிய நெறிமுறைகளை கடைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது...

தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லிக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில்...

ஆரோக்கியமான சிற்றுண்டி என மக்கள் நம்பி வாங்கும் இட்லியை 100% சுகாதாரமாக வழங்குவதை கடைகள் கடமையாகக் கருத வேண்டும்...

Tags:    

மேலும் செய்திகள்