அறநிலையத்துறை அதிகாரி மீது 20 பெண்கள் பாலியல் புகார்.. மதுரையில் பேரதிர்ச்சி

Update: 2024-08-11 09:09 GMT

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் இணை ஆணையராக பணிபுரிந்து வந்தவர் செல்லத்துரை. அண்மையில், மதுரை மண்டல இந்து அறநிலையத்துறையின் துணை ஆணையராக இவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அறநிலையத்துறையின் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களிடம், செல்லத்துரை பாலியல் ரீதியாக அத்துமீறி வருவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. தட்டிக்கேட்கும் பெண்களை சஸ்பெண்ட் செய்துவிடுவேன் எனக்கூறி செல்லத்துரை மிரட்டுவதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் ரகசிய விசாரணை செய்தால் மேலும் சில பெண்கள் வெளியில் வந்து புகாரளிப்பார்கள் எனவும் பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை ஆணையரிடமும், இந்து அறநிலையத்துறை விசாரணை கமிட்டியிடமும் புகார் செய்திருக்கும் பெண்கள், புகாரின் நகலை இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கும் அனுப்பி இருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்