ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

Update: 2024-09-09 16:01 GMT

ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கடந்த 1-ஆம் தேதி வினாடிக்கு 25 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் வந்ததால், குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. 9 நாட்களுக்கு பிறகு, நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக சரிந்ததால் நீர்வீழ்ச்சி மற்றும் காவிரி கரையோரங்களில் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அனுமதி வழங்கி உள்ளார். இதனால், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்