அலறவிடும் வானிலை மாற்றம்... வார்னிங்குடன் வந்த சிக்னல் - மக்களே உஷார்..!
உலக அளவில் மார்ச் மாதத்தில் பதிவான சராசரி வெப்ப அளவு 14.14 டிகிரி சென்டிகிரேடாக இருந்ததாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பர்நிக்கஸ் பருவநிலை மாற்ற ஆய்வு மையம் கூறியுள்ளது. 1850 முதல் 1900 வரையிலான மார்ச் மாதங்களில் பதிவான சராசரி வெப்ப அளவை விட இது 1.68 டிகிரி சென்டிகிரேட் அதிகம் என்று தெரிவித்துள்ளது.
1991 முதல் 2020 வரையிலான மார்ச் மாதங்களில் பதிவான சராசரி வெப்ப ஆளவை விட இது 0.73 டிகிரி சென்டிகிரேட் அதிகம் என்று கூறியுள்ளது. கடந்த 12 மாதங்களில், உலக அளவில் பதிவான சராசரி வெப்பத்தின் அளவு, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளதாக கூறியுள்ளது. 1850-1900 சராசரி வெப்ப அளவை விட இது 1.58 டிகிரி சென்டிகிரேட் அதிகம் என்று கூறியுள்ளது. இதன் காரணமாக வறட்சி, காட்டுத் தீ, பெரும் மழைவு, வெள்ளம் போன்ற அதீத காலநிலை நிகழ்வுகள் வெகுவாக அதிகரித்துள்ளன.