கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை பிராட்வேயில், சிறுபான்மையினர் அணி சார்பில் செந்தமிழ் படைப்பாளி - திராவிட போராளி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார். சுதா சேஷய்யன், முனைவர் ராஜேந்திரன், மூத்த பத்திரிக்கையாளர் பா.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து பேசிய தமிழ் சைவ பேரவை தலைவர் கலையரசி நடராஜன், சனாதனம் குறித்து ஆளுநர் ரவி பேசுவது சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவித்தார்.