அழகு செடி என நினைத்து வளர்த்தவர் தலையில் இறங்கிய இடி.. சிறையில் அடைத்த போலீஸ்
அழகு செடி என நினைத்து வளர்த்தவர் தலையில் இறங்கிய இடி.. சிறையில் அடைத்த போலீஸ்
கன்னியாகுமரி மாவட்டத்தில், அழகுச்செடி என நினைத்து வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், வேலைக்கு சென்ற இடத்தில் வளர்ந்திருந்த ஒரு செடியை அழகுச்செடி என நினைத்து வீட்டிற்கு கொண்டு வந்து வளர்த்துள்ளார். இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து கஞ்சா செடி போல் இருப்பதை தெரிந்து கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் கஞ்சா செடியை வேருடன் பிடுங்கி அகற்றினர். உடனடியாக கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.