திருவண்ணாமலை மாவட்டம் வடுகசாத்து கிராமத்தில் காளைவிடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து ஓடின. அப்போது காளைப்பிடி வீரர்கள் காளைகளை உற்சாகபடுத்தினர். தொடர்ந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன