வாகனங்களின் முகப்பு கண்ணாடியில் FASTAG வில்லையை ஒட்டாவிட்டால், இரு மடங்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களின் முகப்பு கண்ணாடியின் உள்பக்கத்தில், ஃபாஸ்டேக் ஒட்டாத வாகனங்களால், சுங்கச்சாவடிகளில் தேவையில்லாத கால தாமதம் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகளுக்கு அசவுகரியம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில், நாடு முழுவதும் உள்ள சுமார் ஆயிரம் சுங்கச்சாவடிகளிலும், ஃபாஸ்டேக் வில்லையை முகப்பு கண்ணாடியில் ஒட்டாத வாகனங்களுக்கு, இரு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், தடையற்ற, சுகமான பயணத்தை உறுதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.