புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ-வாக இருப்பவர் முத்துராஜா... இவர் பெயரில் மர்ம நபர் ஒருவர் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியுள்ளார். அவசர தேவைக்காக 8 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்றும், உடனடியாக அனுப்பி வைக்குமாறும் அவர் பலருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக தகவலறிந்த திமுக எம்.எல்.ஏ முத்துராஜா, புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட போலி கணக்கின் நம்பரை டிராக் செய்ததில் அது வட இந்தியாவைச் சேர்ந்த எண் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, போலி கணக்கை நம்பி யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என திமுக எம்.எல்.ஏ முத்துராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.