அமலாக்கத் துறை பிடியில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
மஹாதேவ் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தய செயலியின் துணை செயலியில் ஐபிஎல் போட்டிகளை அங்கீகரிக்கப்படாத ஸ்ட்ரீமிங் செய்வதை ஊக்குவித்ததாகக் கூறி அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் நேரில் ஆஜராகி தமன்னா விளக்கம் அளித்தார். மஹாதேவ் செயலிக்கான விளம்பரங்களில் தோன்றிய நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரை விசாரணைக்காக அமலாக்கத் துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.