முதல்வர் ஸ்டாலின் உடன் திருமாவளவன் சந்திப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்திப்பு
வி.சி.கவின் மது ஒழிப்பு மாநாடு குறித்து ஆலோசனை
மது ஒழிப்பு மாநாடு - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் அழைப்பு
"அரசியல் களத்தில் எந்த பாதிப்பு வந்தாலும் எதிர்கொள்ளத் தயார்"
கூட்டணியில் விரிசல், பின்னடைவு ஏற்பட்டாலும் எதிர்கொள்ள தயார்- திருமாவளவன்
ஆட்சியில் பங்கு குறித்து திருமாவளவன் திமுகவுடன் நேரடியாக பேசவில்லை - டி.கே.எஸ் இளங்கோவன்
"திருமாவளவனின் கருத்து தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார்"
சீட் ஷேர் குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை - டி.கே.எஸ் இளங்கோவன்
கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"ஆட்சி, அதிகாரத்திலும் பங்கு, எளிய மக்களுக்கும் அதிகாரம் வேண்டும்" திருமாவளவன்
பழைய வீடியோவை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் விசிக தலைவர் திருமாவளவன்
வீடியோ நீக்கப்பட்டு, மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும்,முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு...
தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி தனி சட்டம் இயற்ற வேண்டும் இதனை திமுகவும் வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தி முதல்வரை சந்திக்கும் திருமாவளவன்...
விசிக நடத்தும் மதுவிலக்கு மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு அரசியல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது...
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று திருமாவளவன் பேசியது விவாத பொருளாக மாறியது...
மதுவிலக்கை கையில் எடுப்பதால் கூட்டணியில் விரிசல் வந்தாலும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என திருமாவளவன் தெரிவித்து இருந்தார்...
மதுவிலக்கு மாநாடு தொடர்பாகவும்,முதல்வருக்கு அழைப்பு விடுப்பது தொடர்பாகவும் திருமாவளவன் சந்தித்துள்ளதாகவும் தகவல்