கடந்த ஆண்டு தீபாவளியை விட இந்த ஆண்டு தீபாவளியன்று பல மடங்கு தீ விபத்துகளும் வழக்கு பதிவுகளும் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
தீபாவளியன்று நேரம் கடந்தும் பட்டாசு வெடித்தது குறித்து பதியப்பட்ட வழக்குகள் மற்றும் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட தீ விபத்துகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன... அந்த வகையில் அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்ததற்காக சென்னையில் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன...
கடந்த 2023ம் ஆண்டு சென்னையில் 554 வழக்குகள்கள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நேற்று தமிழகம் முழுவதும் 232 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன... பட்டாசு வெடித்ததால் மட்டும் 150 தீ விபத்துகளும்
அதில் ராக்கெட் வெடியினால் மட்டும் 107 தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன... தமிழகம் முழுவதும் 544 நபர்கள் தீ விபத்தினால் காயமடைந்துள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தீ விபத்தில் உயிரிழந்துள்ளார். சென்னையில் மட்டும் 48 தீ விபத்துகளும் அதில் ராக்கெட் வெடியால் 38 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன... சென்னையில் ஏற்பட்ட பட்டாசு தீ விபத்துக்கள் மற்றும் மற்ற தீ விபத்துகளினால் 95 பேர் காயமடைந்துள்ளனர்.