ED சோதனை.. ``ஒன்றுமில்லை என்று எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்" - அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Update: 2025-01-05 03:33 GMT

அமலாக்கத்துறையினர் வந்தார்கள் ஒன்றுமில்லை என்று எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சென்னை நந்தனத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார். அதன்பின்னர் வெளியே வந்த போது, அமலாக்கத்துறை நடத்திய சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அமலாக்கத்துறை சோதனைக்கு வந்தார்கள் ஒன்றுமில்லை என்று எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்