"17 ஆண்டுகளுக்கு பிறகு கடவுள் நடத்திய அதிசயம்..!" உற்சாகத்தில் மகிழ்ந்த விவசாயி | Dindigul
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், அனைத்து கண்மாய்களும் நிரம்பியுள்ளது. 17 ஆண்டுகளுக்குப்பின், இத்தகைய காட்சியை பார்ப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், வயல்வெளிகளில் உள்ள கிணறுகள் அனைத்தும் தரை மட்டத்திற்கு நீர் நிரம்பி காணப்படுகிறது. இது விவசாயிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.