விபத்தில் பேருந்திற்கு அடியில் சிக்கிய விவசாயி உடல் கருகி பலி
- அரூர் அருகே சாலை விபத்தில் தனியார் பேருந்திற்கு அடியில் இரு சக்கர வாகனத்துடன் சிக்கிய விவசாயி, வாகனத்தில் பற்றிய திடீர் தீயில் உடல் கருகி உயிரிழந்தார்.
- தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டியைச் சேர்ந்த விவசாயி துரைசாமி, தனது இரு சக்கர வாகனத்தில் அரூர் நோக்கி சென்றுள்ளார். சின்னாங்குப்பம் அருகே சென்ற துரைசாமி, பின்னால் பேருந்து வருவதை கவனிக்காமல் திடீரென திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது தனியார் பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்துடன் துரைசாமி பேருந்து அடியில் சிக்கியுள்ளார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் திடீரென தீ பற்றிய நிலையில், விபத்தில் படுகாயமடைந்த துரைசாமி, நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தியதை தொடர்ந்து, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Next Story