கல்லூரியில் கிண்டல் - மாணவர் தூக்கிட்டு த*கொலை
- சக மாணவர்கள் பிராங்க் செய்து தாக்கியதால், கோவை தனியார் கல்லூரி மாணவர் தனது பிறந்தநாள் அன்றே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- திருப்பூர் பச்சையப்பன் நகரை சேர்ந்த நாகராஜ் என்பரது 21 வயது மகனான சத்யநாராயணன், கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கல்லூரியில் சக வகுப்பு மாணவர்கள், பிராங்க் என்ற பெயரில் சத்தியநாராயணனை கிண்டல் அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சத்யநாராயணன் தனது பிறந்தநாள் அன்றே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது, அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்யநாராயணானை பிராங்க் செய்த மூன்று மாணவர்களும் கல்லூரியில் இருந்து 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்து, கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே, தற்கொலைக்கு முன்பு சத்யநாராயணா கடைசியாக பேசியோ ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் தான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளதாகவும், பயமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story