ஒற்றை போன் காலால் பறிபோகும் பணம் மக்களே உஷார்! -சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Update: 2024-09-24 10:42 GMT

இணையதள மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், FedEX வாடிக்கையாளர் மையத்தில் இருந்து பேசுவதாக கூறி, 1 கோடியே 16 லட்சம் பணம் ஏமாற்றப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட ரமேஷ்பாய் படாபி போக்ரா, பரேஷ் நர்ஷிபாஹாய் , விவேக் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதே போல சிபிஐ அதிகாரி போல மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில், இதுவரை52 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மற்றும் 1 கோடி 70 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணம் மீட்கப்பட்டதுள்ளது. பொது மக்கள் இது போன்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டல் அருகில் உள்ள, கணினிசார் குற்றப் பிரிவு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வங்கி கணக்கு உட்பட, நிதி சார்ந்த எந்த தகவல்களை அறிமுகம் இல்லாத நபருக்கு வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான புகார்களுக்கு 1 9 3 0 என்ற அழை பேசி எண்ணையும். இணையதள புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை சைபர் க்ரைம் போலீசார் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்