தமிழக ஆளுநரை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

Update: 2024-01-11 14:45 GMT

சேலத்தில் தமிழக ஆளுநரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆய்வு கூட்டம் நடத்திய நிலையில், இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், சேலம் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆளுநரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள துணைவேந்தருக்கு துணை போகும் ஆளுநரை கண்டிக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்