கோவை மக்களுக்கு புதிய அடையாளம்

Update: 2024-08-09 16:29 GMT

கோவை மாவட்டத்தில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தலின்போது, கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, அதன்படி, கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கோவை ஒண்டிப்புதூர், எல் அண்ட் டி நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், சிறை மைதானம் ஆகிய 4 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து, கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்