சினிமா ஷூட்டிங் அழைத்துச் சென்று சம்பளம் தராமல் மோசடி - அடிபடும் பிரபல நடிகரின் பெயர்

Update: 2024-10-04 03:50 GMT

சினிமா ஷூட்டிங் அழைத்துச் சென்று, சம்பளம் தராமல் மோசடி செய்ததாக, நீதிபதியிடம் பெண் ஏஜெண்டுகள் புகார் அளித்தனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணி மற்றும் மதுரை மேலூரை சேர்ந்த பாண்டிசெல்வி ஆகியோர், வழக்கறிஞர் மூலமாக மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் ஒரு மனு அளித்தனர். அதில் நடிகர் ஆர்யா நடித்த திரைப்படத்திற்கு ஏராளமான ஆண் மற்றும் பெண் துணை நடிகர்கள் நடிகைகள் தேவை என்றும், அவர்களுக்கு தினமும் 400 ரூபாய் சம்பளம் தங்குமிடம் உணவு இலவசம் என்று மதுரையைச் சேர்ந்த மைக்கேல் என்பவர் தங்களை அணுகியதாக கூறியுள்ளனர். நூற்றுக்கு நடிகர்களை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சூட்டிங்க்காக அழைத்து சென்றதாகவும், அங்கு 20 நாட்களாக சூட்டிங் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஷூட்டிங் முடிந்தவுடன் மைக்கேல் என்பவர் பேசியபடி சம்பளத்தை தரவில்லை என்றும் கூறியுள்ளார். அவர் தலைமறைவான நிலையில், பெப்சி கூட்டமைப்பில் இருந்தும், மைக்கேல் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தங்களை ஏமாற்றி மோசடி செய்ததற்காக மைக்கேல் என்பவர் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்