சென்னை போலீசையே உறைய வைத்த ஆடி ஆஃபர் - பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே உலாவிய அபாய இளைஞர்

Update: 2024-08-15 08:47 GMT

சென்னை போலீசையே உறைய வைத்த ஆடி ஆஃபர் -

பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே உலாவிய அபாய இளைஞர்

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா வாங்கினால் போதை மாத்திரை இலவசம் என ஆடி ஆஃபருக்கு டஃப் கொடுத்து, கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே, இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் களத்தில் இறங்கினர் பீர்க்கன்கரணை போலீசார்.

உடனே பெருங்களத்தூர் ரயில் நிலையம் விரைந்த போலீசார், அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் தனியாக நின்று கொண்டிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசை பார்த்ததும் எஸ்கேப் ஆக, அவரை போலீசார் மடக்கி பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த 23 வயதான கருப்பு என்பவர், கஞ்சா வாங்குபவர்களுக்கு போதை மாத்திரை இலவசம் என ஆஃபர் போட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது அம்பலமானது..

இதை கேட்டு திடுக்கிட்ட போலீசார், கருப்பு என்பவரின் கூட்டாளியான வெங்கடேசன் என்பவரையும் கைது செய்ததோடு, இருவரிடமும் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சா, 30 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

தற்போது இருவரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சூழலில், ஆஃபரில் கஞ்சா விற்பனை செய்யும் அளவிற்கு போதை புழக்கம் அதிகரித்து விட்டதா என வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..

Tags:    

மேலும் செய்திகள்