மெரினா அருகே மகன் கொலை.. திடுக் பின்னணியில் `முதலை' - சாதா மயக்கம் என நினைத்த தாய்க்கு பேரதிர்ச்சி
மெரினா அருகே மகன் கொலை.. திடுக் பின்னணியில் `முதலை' - சாதா மயக்கம் என நினைத்த தாய்க்கு பேரதிர்ச்சி
சென்னையில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான நபரை போலீசார் தேடி வரும் நிலையில், கொலை சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை ராயப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சங்கர் என்பவரது மகன் ஷாம்.
17 வயதான ஷாம், டிசைனிங் தொழில் செய்து வந்த சூழலில், தீபாவளியை கொண்டாட தனது நண்பர்களுடன் ஐஸ் ஹவுசில் உள்ள செல்லம்மாள் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஷாம் தாக்கப்பட்டு தடுமாறி கீழே விழுந்ததாக முதலில் தகவல் வெளியானது.
மயக்க நிலையில் இருந்த ஷாமை, அவரது நண்பர்கள், குடும்பத்தார் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மகன் மறைவால் இடிந்துபோன தாய் தனலட்சுமி, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், ஷாம் மயக்கமடைந்து இறக்கவில்லை எனவும், முதலை கார்த்திக் என்பவர்தான் கொலை செய்ததாகவும், ஷாமின் உறவினர் விஜய் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
தலைமறைவான முதலை கார்த்திக் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஷாமின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் முதலை கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.
நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில், சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.