டிரைவரை சரமாரியாக தாக்கிய கும்பல்.. நடப்பதை பார்த்ததும் பயணிகள் செய்த தரமான சம்பவம்

Update: 2024-08-23 13:17 GMT

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசுப்பேருந்து ஓட்டுநரை தாக்கிய கும்பலை பயணிகளே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி அரசுப்பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, பேருந்துக்கு வழிவிடாமல் இரு சக்கர வாகன ஒட்டிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் அரசுப்பேருந்து ஓட்டுநர் கார்த்திகேயன் ஹாரன் அடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருசக்கர வாகன ஓட்டிகள் பேருந்திற்குள் புகுந்து ஓட்டுநரை தாக்கியுள்ளனர். இதனை கண்ட அரசுப்பேருந்து பயணிகள், தாக்குதல் நடத்திய கும்பலை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்